பல சட்டவிரோத சங்குகள் கடற்படையால் மீட்பு
இலங்கை கடற்படை 2020 மார்ச் 30 அன்று தலைமன்னார் ஊருமலை பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது, காட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல சட்டவிரோத சங்குகள் கண்டுபிடித்தது.
சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்த்து கடற்படை நடத்திய மற்றொரு சோதனை நடவடிக்கை 2020 மார்ச் 30 அன்று மன்னார் ஊருமலை பகுதி மையமாக கொண்டு வட மத்திய கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டது. அங்கு காட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1150 சங்குகள் (70 மில்லிமீட்டருக்கு குறைவான) கண்டுபிடிக்கப்பட்டதுடன் குறித்த சங்குகள் கடற்படை காவலுக்கு எடுக்கப்பட்டது.
தொடர்ச்சியான கடற்படைத் நடவடிக்கைகளால் கடத்தல்காரர்கள் இந்த சங்குகளை மறைக்க முயன்றதாக சந்தேகிக்கப்படுகிறது, பறிமுதல் செய்யப்பட்ட சங்குகள் மன்னார் மீன்வள உதவி இயக்குநரிடம் ஒப்படைக்கப்பட்டது.