தென்கிழக்கு கடற்படை கட்டளையில் வாழும் மக்களுக்கு கடற்படையால் நிவாரணம்
தென்கிழக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான பகுதியில் வாழும் பல குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் விநியோகிக்கும் திட்டமொன்று கடற்படை மேற்கொண்டுள்ளது.
நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை மேலும் வலுப்படுத்த கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் வழிகாட்டுதலின் கீழ் இலங்கை கடற்படை பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தென்கிழக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான பல குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கல் 2020 மார்ச் 27 முதல் 29 வரை தென்கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் செனரத் விஜேசூரியவின் வழிகாட்டுதலின் கீழ் செயல்படுத்தப்பட்டது. இங்கு பானம, கல்முனை, அக்கரைபத்து, பொத்துவில் மற்றும் லாகுகல பகுதிகளில் உள்ள குடும்பங்கள் மையமாக கொண்டு உலர் உணவு பொதிகள் விநியோகிக்கப்பட்டன.
தென்கிழக்கு கடற்படை கட்டளையில் உள்ள அனைத்து கடற்படை வீரர்களின் ஒத்துழைப்புடன் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது மேலும் எதிர்காலத்தில் இதேபோன்ற சமூக நல திட்டங்களுக்கு பங்களிக்க கடற்படை தயாராக உள்ளது.
|