கடல் வழியாக கொண்டு வர முயற்சித்த கேரள கஞ்சாவுடன் ஒருவர் கடற்படையால் கைது

இன்று (2020 மார்ச் 29,) யாழ்ப்பாணம் உடுத்துரை பகுதி கடலில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக கடல் வழியாக கரைக்கு கொண்டுவர முயற்சித்த கேரள கஞ்சா பொதியொன்று கடற்படை கைது செய்தது.

புதிய கொரோனா வைரஸ் பரவியதைத் தொடர்ந்து, முழு தீவிலும் ஊரடங்கு உத்தரவு விதிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த சூழ்நிலைகளில் கூட போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தங்களுடைய சட்டவிரோத வியாபாரத்தை நடத்துவதற்கு பல சூழ்ச்சிகளை உருவாக்க முயற்சிக்கின்றனர். அந்த முயற்சிகளைத் தடுக்க கடற்படை சிறப்புப் பணிகளைத் தொடங்கியுள்ளது. அதன் படி, இன்று (2020 மார்ச் 29,) வடக்கு கடற்படைக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது யாழ்ப்பாணம் உடுத்துரை கடலில் சந்தேகத்திற்கிடமான டிங்கி படகொன்று இருப்பது கண்கானிக்கப்பட்டது. குறித்த படகு கடற்படையினரால் மேலும் சோதனை செய்யப்பட்டதுடன் படகிலிருந்து 114 கிலோ கிராமுக்கு மேற்பட்ட கேரள கஞ்சாவை கடற்படை கண்டுபிடித்தது. அங்கு குறித்த படகு, கேரள கஞ்சா மற்றும் கப்பலில் இருந்த ஒருவரையும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டது. சந்தேகநபர் வடமராச்சி கிழக்கு தாலயடி பகுதியில் வசிக்கும் 37 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவர், கேரள கஞ்சா மற்றும் டிங்கி படகு மேலதிக விசாரணைக்காக பளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், நாட்டில் ஏற்பட்டுள்ள ஆபத்தான நிலைமைக்கு ஆதரவு வழுங்குகின்ற கடற்படை தேசிய பாதுகாப்பிலும் தனது அன்றாட நடவடிக்கைகளைத் தொடர்கிறது,