சட்டவிரோதமாக கால்நடைகளை கொண்டு சென்ற நாங்கு (04) நபர்கள் கடற்படையினரால் கைது
2020 மார்ச் 27 ஆம் திகதி கற்பிட்டி, எலுவன்குளம பகுதியில் கடற்படை மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக கால்நடைகளை கொண்டு சென்ற 04 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இலங்கை கடற்படை சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது, அதன்படி, வட மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் கற்பிட்டி, எலுவன்குளம பகுதியில் மேற்கொண்ட ரோந்துப் பணியின் போது சந்தேகத்திற்கிடமான இரண்டு (02) மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு ஜிப் வண்டி கண்டுபிடிக்கப்பட்டன, குறித்த ஜிப் வண்டியை மேலும் சோதனை செய்த பொது சட்டவிரோதமாக வண்டியில் கொண்டு செல்லப்படுகின்ற ஐந்து மாடுகள் கண்டுபிடிக்கப்பட்டதுடன் ஜிப் வண்டியில் இருந்த இரண்டு நபர்கள் (02) கடற்படையிரால் கைது செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையில் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் இந்த சட்டவிரோத செயலில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளதுடன் அவர்களையும் கடற்படையினர் கைது செய்யப்பட்டனர். அதன் படி கைது செய்யப்பட்ட நாங்கு பேரும் புத்தலம் மற்றும் எலுவன்குளம பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பது மேலும் தெரியவந்தது.
ஐந்து (05) கால்நடைகளும் இறைச்சிக்காக கொலைசெய்ய கொண்டு செல்லப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. நாங்கு சந்தேகநபர்கள், ஜிப் வண்டி, இரண்டு மோட்டார் சைக்கில் மற்றும் கால்நடைகள் மேலதிக விசாரணைக்காக வனாதவில்லுவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.