கொழும்பு மெனிங் பொதுச்சந்தையை கிருமி நீக்கம் செய்ய கடற்படை பங்களிப்பு
நாட்டில் புதிய கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க இலங்கை கடற்படை நடத்திய கிருமி நீக்கம் திட்டமொன்று 2020 மார்ச் 27 அன்று கொழும்பு மெனிங் பொதுச்சந்தை வளாகத்தில் நடைபெற்றது.
நாட்டில் 'புதிய கொரோனா' வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த கடற்படையின் வேதியியல், உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி (Chemical, Biological, Radiological and Nuclear) அவசரநிலை பதிலளிப்பு பிரிவு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் த சில்வாவின் வழிகாட்டுதலின் கீழ் பல கிருமி நீக்கம் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. அதன் படி குறித்த பிரிவு மூலம் 2020 மார்ச் 27 அன்று கொழும்பு மெனிங் பொதுச்சந்தை வளாகத்தில் மற்றொரு கிருமி நீக்கம் திட்டமொன்று செயல்படுத்தப்பட்டது. மெனிங் சந்தையில் வர்த்தக நடவடிக்கைகளை அத்தியாவசிய சேவையாக பராமரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதால், சந்தையில் உள்ள வர்த்தகர்களுக்கும், வெளியில் இருந்து வருபவர்களுக்கும் பாதுகாப்பான சூழலை உருவாக்க இந்த வளாகம் கிருமி நீக்கம் செய்யப்பட்டது.
சந்தையில் உள்ள அனைத்து இடங்களையும் உள்ளடக்கும் வகையில் இந்த கிருமி நீக்கம் திட்டம் நிலையான செயல்பாட்டு நடைமுறையைப் பின்பற்றி நடத்தப்பட்டது. எதிர்காலத்திலும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பல கிருமி நீக்கம் திட்டங்களை மேற்கொள்ள கடற்படை தயாராக உள்ளது.
|