கடற்படை பொது மருத்துவமனை (கொழும்பு) மூலம் ஓய்வு பெற்ற கடற்படை வீரர்களுக்கு மற்றும் கடற்படையினரின் குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
கடற்படை பொது மருத்துவமனை (கொழும்பு) மூலம் ஓய்வு பெற்ற கடற்படை வீரர்களுக்கு மற்றும் கடற்படையினர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்படுகின்ற சிகிச்சை சேவைகளை நாட்டின் தொற்றுநோய் நிலைமை குறித்து, தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளது.
இலங்கை முழுவதும் பரவியுள்ள கோவிட் -19 தொற்றுநோயை ஒழிப்பதற்கான அரசாங்கத்தின் தேசிய முயற்சியின் ஒரு பகுதியாக இலங்கை கடற்படை பின்வரும் நடவடிக்கைகள் மேற்கொள்வதில் பெரும் பங்களிப்பைச் செய்து வருகிறது.
அ. தீவு முழுவதும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு
ஆ. கடற்படை மருத்துவ ஊழியர்களை அரசு மருத்துவமனைகளில் தேவைக்கேற்ப இணைத்தல்
இ. அரசு மருத்துவமனைகளில் கோவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் வழங்குதல்.
ஈ. பொது இடங்களில் கிருமி நீக்கம் நடவடிக்கைகள் மேற்கொண்டல்
உ.ஊரடங்கு உத்தரவு காரணமாக துன்பப்படும் பொதுமக்களுக்கு உணவு மற்றும் பானங்கள் வழங்குவதில் நேரடியாக பங்களித்தல்
ஊ. கடற்படையின் வழக்கமான பாதுகாப்பு கடமைகளை மற்றும் ஒப்படைக்கப்பட்ட கடமைகளை நிறைவேற்றல்
எனவே, தேசிய பேரழிவு சூழ்நிலையில் கடற்படையினர்களுக்கு ஒதுக்கப்பட்ட மேற்கண்ட கடமைகளை நிறைவேற்றுவதில் கடற்படை பணியாளர்களின் ஆரோக்கியத்தை பேணுவதற்காக கடற்படை பொது மருத்துவமனை உகந்த நிலையில் செயல்படுவது மிக முக்கியமானது.கடற்படை பொது மருத்துவமனை இப்போது வரையறுக்கப்பட்ட மனித வளங்கள் மூலம் இந்த நோக்கங்களை அடைய கடுமையான பாதுகாப்புக் கொள்கையைக் கொண்டுள்ளது.கடற்படை பொது மருத்துவமனை ஊழியர்களில் ஒரு உறுப்பினருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டாலும் சம்பந்தப்பட்ட நபருடனும், கடற்படை பொது மருத்துவமனை வளாகத்துடனும் பணிபுரியும் பிற ஊழியர்களும் தற்போதைய தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளின்படி தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
குறிப்பிடப்பட்ட காரணத்தை கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்ட நோயாளிகள் கடற்படை வளாகத்திற்குள் வருவதற்கான வாய்ப்புகளை குறைப்பதற்காக அனைத்து கடற்படை தளங்களிலும் நிறுவனங்களிலும் வெளியாட்கள் வருவதை நிறுத்த கடற்படை முடிவு செய்துள்ளது. கடற்படை பணியாளர்களுக்கு அனைத்து வசதிகளும்கொண்ட நாட்டின் ஒரே மருத்துவமனை வளாகமான கொழும்பு கடற்படை மருத்துவமனை தற்போது கடற்படையில் பணியாற்றும் நபர்களின் சுகாதார நோக்கங்களுக்காக மட்டுமே திறந்த முடிவு செய்துள்ளது.
இருப்பினும், கடற்படை மருத்துவமனை ஓய்வுபெற்ற கடற்படை வீரர்கள் மற்றும் கடற்படை வீரர்களின் குடும்ப உறுப்பினர்களின் அவசர சிகிச்சைக்காக மட்டுமே திறக்கப்படும், அதே நேரத்தில் அரசு மருத்துவமனைகளும் இதே நடைமுறையை பின்பற்றுகின்றன. நாட்டில் இந்த பேரழிவு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டவுடன் கடற்படை பொது மருத்துவமனை ஓய்வுபெற்ற அனைத்து கடற்படை வீரர்களுக்கும், கடற்படை வீரர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் கூடிய விரைவில் மீண்டும் சிகிச்சை அளிக்க எதிர்பார்க்கப்படுகிறதுடன் சம்பந்தப்பட்ட அனைத்து பணியாளர்களும் உங்கள் சாதாரண சிகிச்சையை அருகிலுள்ள மருத்துவமனையில் அல்லது மருத்துவ மையத்தால் பெற்று, இந்த பேரழிவு சூழ்நிலையில் கடற்படையின் தேசிய பொறுப்புணர்வுடன் உதவுமாரு தயவுசெய்து கேட்டுக்கொள்கின்றோம்.