காகத்தீவில் இருந்து கேரள கஞ்சா பொதியொன்று கடற்படை கைப்பற்றியது
மன்னார் கிராஞ்சி பகுதியில் உள்ள காக்கதீவில் 2020 மார்ச் 26 அன்று மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது சுமார் 400 கிராம் கேரள கஞ்சாவை கடற்படை மீட்டது.
இலங்கைக்கு கடல் வழியாக கொண்டு வரப்படும் போதைப்பொருள் கடத்தல் முயற்சிகளைத் தடுக்க இலங்கை கடற்படை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதன்படி, வட மத்திய கடற்படையுடன் இணைக்கப்பட்ட கடற்படையினர் 2020 மார்ச் 26 ஆம் திகதி மன்னாரின் கிராஞ்சி பகுதியில் உள்ள காகத்தீவில் சோதனை நடவடிக்கையொன்று மேற்கொண்ட போது காட்டு பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான பொதியொன்று கண்டுபிடித்தனர். அங்கு மேற்கொண்டுள்ள மேலதிக சோதனை நடவடிக்கையின் பொதியில் இருந்த சுமார் 400 கிராம் கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது, தொடர்ச்சியான கடற்படை ரோந்துகள் காரணமாக கடல் வழியாக கடத்தப்பட்டிருக்கக்கூடிய இந்த கேரள கஞ்சா தீவில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
மேலும், கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட கேரள கஞ்சாவை மேலதிக விசாரணைகளுக்காக ஜெயபுரம் பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.