போதைப்பொருளுடன் ஒரு சந்தேக நபர் கடற்படையால் கைது
கடற்படையால் இன்று (2020 மார்ச் 26) புத்தலம் எத்தாலை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ரோந்துப்பணியின் போது போதைப்பொருள் வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.
தீவில் இருந்து போதைப்பொருளை அகற்றுவதற்கான தேசிய முயற்சிக்கு உதவுகின்ற கடற்படை, பல போதைப்பொருள் கைது செய்யும் நடவடிக்கைகள் வெற்றிகரமாக கடலிலும், நிலத்திலும் மேற்கொண்டுள்ளது. அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடற்படையினர், புத்தலம் எத்தாலை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது சாலையில் பயணித்த ஒரு சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிளை சோதனையிட்டனர். அங்கு 05 கிராமுக்கு மேற்பட்ட (5 கிராம் 170 மிலி கிராம்) ஐஸ் போதைப்பொருள் மற்றும் கேரள கஞ்சாவுடன் கலந்த 40 கிராம் போதைப்பொருள் (மாவா) ஆகியவற்றை ரகசியமாக கொண்டு சென்ற ஒருவரை கைது செய்யப்பட்டது.
சந்தேக நபர் குறித்த பகுதியில் வசிக்கும் 34 வயதானவர் என கண்டரியப்பட்டதுடன் மேலதிக விசாரணைக்காக சந்தேகநபர், போதைப்பொருள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவ நொரொச்சோலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.