வெடிபொருட்களை பயன்படுத்தி பிடிக்கப்பட்ட சுமார் 30 கிலோ கிராம் மீன்களுடன் ஒரு படகு கடற்படையால் கைது
இலங்கை கடற்படை இன்று (2020 மார்ச் 25,) திருகோணமலை எரக்கண்டி கடற்கரையில் இருந்து கிட்டத்தட்ட 30 கிலோகிராம் மீன்களுடன் ஒரு படகு பறிமுதல் செய்தது.
இலங்கைக்கு சொந்தமான கடல்சார் மற்றும் மீன்வள வளங்களை பாதுகாக்க இலங்கை கடற்படை தொடர்ந்து ரோந்து நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. அதன் படி, இன்று (2020 மார்ச் 25) கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் திருகோணமலை, எராக்கண்டி கடற்கரையில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான டிங்கி படகொன்று கண்டுபிடித்தனர். குறித்த டிங்கி படகை மேலும் சோதனை செய்த போது சட்டவிரோத வெடிபொருட்களை பயன்படுத்தி பிடிக்கப்பட்ட சுமார் 30 கிலோ கிராம் மீன், 02 நீர் ஜெல் குச்சிகள் மற்றும் ஒரு பாதுகாப்பு நூல் (3½ அங்குலங்கள்) கண்டுபிடிக்கப்பட்டன. அதன்படி, கடற்படை மீன், வெடிபொருள் மற்றும் பிற மீன்பிடி உபகரணங்களை பறிமுதல் செய்துள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட மீன், வெடிபொருட்கள், டிங்கி மற்றும் பிற மீன்பிடி சாதனங்கள் பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக குச்சவேலிபொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.