களுத்துறை மாவட்ட பொது மருத்துவமனையில் மற்றும் கொழும்பு துறைமுக மருத்துவ பிரிவில் கிருமி நீக்கம் செய்யும் திட்டமொன்று கடற்படையால் மேற்கொள்ளப்பட்டது
நாட்டில் புதிய கொரோனா வைரஸை பரவுவதைக் கட்டுப்படுத்த இன்று (2020 மார்ச் 25) கடற்படை களுத்துறை மாவட்ட பொது மருத்துவமனையில் மற்றும் கொழும்பு துறைமுக மருத்துவ பிரிவில் கிருமி நீக்கம் செய்யும் திட்டமொன்று மேற்கொண்டுள்ளது.
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் அறிவுறுத்தல்களில் கீழ், கடற்படை பொது இடங்களில் பல கிருமி நீக்கம் செய்யும் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. அதன் படி மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்கவின் வழிகாட்டுதலின் கீழ் மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படை வேதியியல், உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி அவசரநிலை பதிலளிப்பு (Chemical, Biological, Radiological and Nuclear) பிரிவு இன்று (2020 மார்ச் 25) களுத்துறை மாவட்ட பொது மருத்துவமனையில் மற்றும் கொழும்பு துறைமுக மருத்துவ பிரிவில் ஒரு கிருமி நீக்கம் செய்யும் திட்டமொன்று மேற்கொண்டுள்ளது.
எதிர்காலத்திலும், வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க பொது இடங்களில் இதேபோன்ற கிருமி நீக்கம் செய்யும் திட்டங்களை மேற்கொள்ள கடற்படை தயாராக உள்ளது.
|