பொன்னாலை சாலைத் தடையில் ஒரு இந்திய நாட்டவரும், கேரள கஞ்சா கொண்ட இரண்டு சந்தேக நபர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்
2020 மார்ச் 24 ஆம் திகதி யாழ்ப்பாணம் பொன்னாலை சாலைத் தடையில் சந்தேகத்திற்கிடமான இரண்டு மோட்டார் சைக்கிளில்களை சோதனை செய்த போது ஒரு இந்தியர் மற்றும் கேரள கஞ்சா வைத்திருந்த இரண்டு சந்தேக நபர்களை கடற்படை கைது செய்தது.
வடக்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடற்படை வீரர்களால் 2020 மார்ச் 24 ஆம் திகதி யாழ்ப்பாணம், பொன்னாலை சாலைத் தடையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த சந்தேகத்திற்குரிய ஒருவரை சோதனை செய்த போது அவர் சுற்றுலா வீசாவில் இலங்கையில் தங்கியிருந்த இந்தியர் என்பது தெரியவந்தது. அவரை மேலும் சோதனை செய்த போது, அவரிடமிருந்து உள்ளூர் சாரதி அனுமதி பத்திரமொன்றும் கண்டுபிடிக்கப்பட்டதுடன் குறித்த நபர் மற்றும் மோட்டார் சைக்கிள் கடற்படை காவலில் வைக்கப்பட்டது.
மேலும், சாலையில் பயணித்த சந்தேகத்திற்கிடமான மற்றொரு மோட்டார் சைக்கிள் சோதனை செய்த போது மோட்டார் சைக்களில் பயணித்த இரண்டு நபர்களிடமிருந்து சுமார் 25 கிராம் கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டதுடன் குறித்த மோட்டார் சைக்களில் பயணித்த இருவரையும் கடற்படையால் கைது செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட இந்திய நாட்டவர் 48 வயதுடைய இந்தியாவில் தமிழ்நாடு பகுதியில் வசிப்பவர் என்றும் மற்ற இரண்டு சந்தேக நபர்கள் 30 மற்றும் 43 வயதுடைய யாழ்ப்பாணம் காரைநகர், மற்றும் கொண்டவில் (மேற்கு) பகுதிகளில் வசிப்பவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட இந்தியர், மற்ற இரண்டு சந்தேக நபர்கள், கேரள கஞ்சா மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மேலதிக விசாரணைகளுக்காக வடுகோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைக்க கடற்படையால் நடவடிக்கை எடுக்கப்பட்டது.