நிகவெரடிய மற்றும் மஹவ பகுதிகளில் கிருமிகளை நீக்கும் திட்டங்கள் கடற்படை மேற்கொண்டு வருகிறது

நாட்டில் புதிய கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் முயற்சியாக, இலங்கை கடற்படை 2020 மார்ச் 23 அன்று நிகவெரடிய மற்றும் மஹவ பகுதிகளில் பொது இடங்களில் கிருமிகளை நீக்கும் செயற்த்திட்டமொன்றை மேற்கொண்டது.

உலக சுகாதார அமைப்பால் கொரோனா வைரஸ் ஒரு தொற்றுநோயாக அறிவிக்கப்பட்ட பின்னணியில், நோய் பரவுவதை கட்டுப்படுத்த அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன்படி, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சிவாவின் வழிகாட்டுதலின் கீழ், பொது இடங்களில் பல கிருமிகளை நீக்கும் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் டி.கே.பி தசநாயக்கவின் வழிகாட்டுதலின் கிழ், வடமேற்கு கடற்படை கட்டளையின் கடற்படை வேதியியல், உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி அவசரநிலை பதிலளிப்பு பிரிவு, 2020 மார்ச் 23, அன்று நிகவெரடிய மற்றும் மஹவ பகுதியில் பிரதான பேருந்து தரிப்பிடங்கள், மருத்துவமனைகள், ரயில் நிலையங்கள், காவல் நிலையங்கள், சதோச மற்றும் வங்கி கிளைகளை மையமாகக் கொண்டு கிருமிகளை நீக்கும் திட்டங்கள் நடைமுறைப்படுத்தியது.

மேலும், பொதுமக்களின் பாதுகாப்பிற்காக வைரஸ் பரவாமல் தடுக்க கடற்படை தொடர்ந்து விடாமுயற்சியுடன் செயல்படுகிறது.