யாழ்ப்பாணத்தில் உள்ள மத இடங்கள் மற்றும் வீடுகள் மையமாக கொண்டு கடற்படை கிருமி நீக்கம் திட்டங்கள் நடத்துகிறது

நாட்டில் புதிய கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக, கடற்படை 2020 மார்ச் 23 அன்று யாழ்ப்பாண தீபகற்பத்தின் சுன்னாகம் பகுதியில் மத இடங்கள் மற்றும் வீடுகள் மையமாக கொண்டு கிருமி நீக்கம் திட்டத்தை நடத்தியது.

உலக சுகாதார அமைப்பால் (WHO) ஒரு தொற்றுநோயாக அறிவிக்கப்பட்ட புதிய 'கொரோனா வைரஸை பரவாமல் தடுக்க பல திட்டங்கள் அரசாங்கம் தொடங்கியுள்ளது. அதன் படி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் வழிகாட்டுதலின் கீழ் பல பணிகள் மேற்கொண்டு வருகின்றதுடன் 2020 மார்ச் 23 ஆம் திகதி யாழ்ப்பாணத்தின் பிரதேச சுகாதார சேவைகள் அலுவலகத்தின் வேண்டுகோளின் பேரில், கடற்படைத் துணைத் தலைவர் மற்றும் வடக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் கபில சமரவீரவின் வழிகாட்டுதலின் கீழ், யாழ்ப்பாணம், சுன்னாக்கம் பகுதியில் கிருமி நீக்கம் திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது. அதன் படி வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வேதியியல், உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி அவசரநிலை பதிலளிப்பு பிரிவு இந்த கிருமி நீக்கம் திட்டத்தை தவாடி மற்றும் தவாடி வடக்கில் ஒரு கோயில் மற்றும் வீடுகளில் மேற்கொண்டது. இந்த திட்டம் பல பகுதிகளில் வைரஸ் பரவும் அபாயத்தைத் தடுக்க, முறையான நடைமுறைகள் படி மேற்கொள்ளப்பட்டது.

மேலும், பொது மக்களின் பாதுகாப்புக்காக வைரஸ் பரவாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் கடற்படை எடுத்து வருகிறது.