காலி துறைமுகத்தில் கப்பல்களை கிருமி நீக்கம் செய்ய கடற்படை பங்களிப்பு
நாட்டில் புதிய கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க காலி துறைமுகத்தில் கப்பல்களை இன்று (2020 மார்ச் 22,) இலங்கை கடற்படை கிருமி நீக்கம் செய்தது.
நாட்டில் கொடிய வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை வலுப்படுத்த இலங்கை கடற்படை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதன்படி, காலி துறைமுகத்தில் உள்ள கப்பல்களை கிருமி நீக்கம் செய்ய கடற்படையின் வேதியியல், உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி அவசரநிலை பதில் பிரிவு (Chemical, Biological, Radiological and Nuclear) இன்று (2020 மார்ச் 22,) இன்று நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் த சில்வாவின் வழிகாட்டுதலிலும், தெற்கு கடற்படைக் கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் கச்சப பாலின் வழிகாட்டுதலிலும் குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த வைரஸ் காரணமாக உலகம் ஆபத்தில் இருக்கும் நேரத்தில், நாட்டின் வைரஸ் பரவல் கட்டுப்பாட்டை உறுதி செய்வதற்கும், பொதுமக்களின் பாதுகாப்பிற்காகவும் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க இலங்கை கடற்படை விடாமுயற்சியுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.