வணிகக் கப்பல்களின் உள் பாதுகாப்புக் குழுக்கள் மூலம் COVID -19 நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்க கடற்படை சிறப்பு ஏற்பாடு செய்து வருகிறது

இந்த கடல் பாதுகாப்பு அதிகாரிகள் வணிகக் கப்பல்களுக்கு ஏற்றும் மற்றும் கப்பல்களில் இருந்து இறக்கும் செயல்முறை இலங்கை கடற்படையின் கவனமான மேற்பார்வையின் கீழ் கடற்படையினர்,வணிகக் கப்பல்களின் உள்ளூர் முகவர்கள் மற்றும் இலங்கை துறைமுக அதிகாரசபை ஆகியவற்றின் பரஸ்பர ஒப்புக் கொள்ளப்பட்ட நடைமுறைக்கு ஏற்ப நடைபெறுகிறது. இந்த செயல்முறை நாட்டின் தற்போதைய சுகாதார நிலையை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றதுடன் தரையிறங்கிய வெளிநாட்டு கடல் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் அவர்களுடன் நேரடியாகக் கையாளும் உள்ளூர் முகவர்கள் காலியில் உள்ள பூச்ச கடற்படைத் தளத்தில் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் வைக்கப்பட்டு தங்கள் கடமைகளுக்காக மீண்டும் வெளியேற அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும் குறுகிய காலத்திற்கு வரும் கடல் பாதுகாப்புப் பணியாளர்கள் முழுமையான தனிமைப்படுத்த போதுமான நேரம் இல்லாத காரணத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று இடங்களில் கடும் சுய தனிமைப்படுத்தலுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

மேலும், ஒவ்வொரு ஆயுதம் மற்றும் வெடிமருந்துகள் மற்றும் உள் பாதுகாப்பு குழுக்களின் தனிப்பட்ட உடமைகள் துறைமுக வளாகத்தில் துறைமுகத்தின் சுகாதார பிரிவு மற்றும் இலங்கை கடற்படையின் தனிமைப்படுத்தப்பட்ட பிரிவு ஆகியவற்றால் கிருமி நீக்கம் செய்யப்படுகின்றன. இந்த முக்கியமான கட்டத்தில் இறக்குமதி மற்றும் ஏற்றுமதியைப் பொறுத்து பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், நாட்டின் இடையூறற்ற பொருளாதார நடவடிக்கைகளை நிறைவேற்ற இலங்கை கடற்படை முக்கிய மற்றும் பொறுப்பான பங்கைக் கொண்டுள்ளது.

முறையான சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி இந்த முழு நடவடிக்கைகளும் கடற்படையால் மேற்கொள்ளப்படுகின்றன, மேலும் இது தொடர்பான நடைமுறை பயிற்சி 2020 மார்ச் 20 அன்று காலி துறைமுகத்தில் நடைபெற்றது.