ஊரடங்கு உத்தரவின் கீழ் துன்பப்படும் ஏழை மக்களுக்கு கடற்படை மதிய உணவு வழங்கியது

இலங்கை கடற்படை இன்று (2020 மார்ச் 21,) றாகம, வத்தலை மற்றும் கந்தான ஆகிய பகுதிகளில் நெடுஞ்சாலைகளில் வசிக்கும் ஏழை மக்களுக்கு மதிய உணவை விநியோகித்தது.

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த 2020 மார்ச் 20 அன்று மாலை 6:00 மணியளவில் அரசாங்கம் விதித்த ஊரடங்கு உத்தரவு காரணமாக, உணவு மற்றும் பானம் பெற முடியாத ஏழை மக்களுக்கு கடற்படை மதிய உணவு வழங்கியுள்ளது. கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா மற்றும் மேற்கு கடற்படை பகுதி தளபதி சுமித் வீரசிங்க ஆகியோரின் கருத்தின் படி வெலிசர கடற்படை வளாகத்தில் கட்டளை அதிகாரி கேப்டன் பூஜித சுகததாசவின் வழிகாட்டுதலின் கீழ் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. வத்தலை மற்றும் ஜா-எல பகுதி நெடுஞ்சாலைகளில் வசிக்கும் ஏழை மக்களுக்கு வெலிசர கடற்படை வளாகத்தில் உள்ள அனைத்து கடற்படை வீரர்களும் வழங்கிய பங்களிப்புகளுடன் மதிய உணவு வழங்கப்பட்டது.

நாட்டில் நிலவும் சூழ்நிலையை எதிர்கொண்டுள்ள நிலையில், கிருமி நீக்கம் திட்டங்களை மட்டுமல்லாமல் இந்த வகையான சமூகப் பொறுப்புணர்வையும் நிறைவேற்ற கடற்படை உறுதிபூண்டுள்ளது.