காலியில் இலங்கை கடற்படை நடத்திய இரத்த தான திட்டம்

கடற்படை மற்றும் தேசிய இரத்தமாற்ற சேவை ஏற்பாடு செய்த இரத்த தான திட்டமொன்று இலங்கை கடற்படைக் கப்பல் தக்‌ஷின நிருவனத்தில் இன்று (2020 மார்ச் 21,) நடைபெற்றது.

புதிய கொரோனா வைரஸின் தாக்கத்துடன், கராபிட்டி இரத்த வங்கியில் உள்ள இரத்தம் வேகமாக குறைந்து வருவதாகவும் தற்போதுள்ள இரத்த பற்றாக்குறையைப் பற்றியும் இரத்த வங்கியின் இயக்குனர் விடுத்த வேண்டுகோளின் படி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் அறிவுறுத்தலின் பேரில் தெற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் கச்சப போலின் வழிகாட்டுதலின் கீழ் இலங்கை கடற்படை இன்று (2020 மார்ச் 21) இலங்கை கடற்படை கப்பல் தக்‌ஷின நிறுவனத்தில் இரத்த தான திட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தெற்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்டுள்ள ஏராளமான மாலுமிகள் இந்த உன்னதமான காரணத்தை அடைய மிகுந்த பங்களிப்பை செய்துள்ளனர்.

கராபிட்டி இரத்த வங்கியின் பணியாளர்கள் மற்றும் கடற்படை மருத்துவ ஊழியர்கள் இந்த முயற்சிக்கு முழு பங்களிப்பை வழங்கியுள்ளனர், மேலும் எதிர்காலத்தில் நாட்டின் தேசிய தேவைகளை நிவர்த்தி செய்ய கடற்படை தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ய தயாராக உள்ளது.