இலங்கை கடற்படை கொழும்பு துறைமுக கொள்கலன் முனையகத்தை கிருமி நீக்கம் செய்துள்ளது

நாட்டில் புதிய கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க இலங்கை கடற்படை நடத்திய மற்றொரு கிருமி நீக்கம் திட்டம் 2020 மார்ச் 20 ஆம் திகதி கொழும்பு துறைமுக கொள்கலன் முனையகத்தை (Jaya Container Terminal) மையமாக கொண்டு இடம்பெற்றது.

கடற்படையின் வேதியியல், உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி அவசரநிலை பதிலளிப்பு பிரிவு, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் வழிகாட்டுதலின் கீழ், புதிய கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன்படி, நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் கொழும்பு துறைமுகப் பகுதிகளில் கடற்படை கிருமி நீக்கம் பணிகளை மேற்கொண்டு வருகிறது. 2020 மார்ச் 20 ஆம் திகதி கொழும்பு துறைமுக கொள்கலன் முனையகத்தை மற்றும் நிர்வாகக் கட்டடத்திலும் அதன் அனைத்து அலுவலக வளாகங்களிலும் மற்றொரு கிருமி நீக்கம் திட்டம் செயல்படுத்தப்பட்டது. வளாகத்தில் கிருமி நீக்கம் செய்யப்படுவது அனைத்து இடங்களையும் உள்ளடக்கும் நிலையான நடைமுறைக்கு ஏற்ப மேற்கொள்ளப்பட்டது, இதனால் வளாகத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு பாதுகாப்பாக கடமைகளைச் செய்ய முடியும்.

நாட்டின் பொருளாதாரத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அத்தகைய இடங்களுக்கு வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக கடற்படை கிருமி நீக்கம் திட்டங்களில் தொடர்ந்து பணியாற்றி வருகிறது.