இலங்கை கடற்படை காலியில் பல இடங்களில் கிருமி நீக்கம் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது
நாட்டில் புதிய கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க இலங்கை கடற்படை நடத்திய மற்றொரு கிருமி நீக்கம் திட்டம் 2020 மார்ச் 18.19 மற்றும் 20 திகதிகளில் காலி பகுதி மையமாக கொண்டு இடம்பெற்றது.
உலக சுகாதார அமைப்பால் (WHO) ஒரு தொற்றுநோயாக அறிவிக்கப்பட்ட புதிய 'கொரோனா வைரஸை பரவாமல் தடுக்க பல திட்டங்கள் அரசாங்கம் தொடங்கியுள்ளது. அதன் படி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் வழிகாட்டுதலின் கீழ், பல பணிகள் கடற்படை மேற்கொண்டு வருகின்றன. தெற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் கச்சப போலின் வழிகாட்டுதலின் கீழ், 2020 மார்ச் 18, 19 மற்றும் 20, ஆகிய திகதிகளில், தெற்கு கடற்படை கட்டளையின் கடற்படை வேதியியல், உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி அவசர பதில் (Chemical, Biological, Radiological and Nuclear). பிரிவு மூலம் காலி துறைமுகம், கலுவெல்ல கிறிஸ்தவ தேவாலயம் மற்றும் காலி மாவட்ட செயலகம் ஆகியவற்றில் கிருமி நீக்கம் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டது.
கூடுதலாக, பொதுமக்களின் பாதுகாப்பிற்காக வைரஸ் பரவாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க கடற்படை விடாமுயற்சியுடன் மற்றும் கவனமாக செயல்பட்டு வருகிறது