கேரள கஞ்சா வைத்திருந்த இருவர் கடற்படையினரால் கைது
இலங்கை கடற்படை இன்று (2020 மார்ச் 20) தலைமன்னார் கலங்கரை விளக்கத்தின் வடக்கு கடல் பகுதியில் மேற்கொண்டுள்ள ரோந்துப் பணியின் போது கேரள கஞ்சாவுடன் இரண்டு பேரை கைது செய்தது.
இலங்கை கடற்படை தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் விரிவான கண்காணிப்பை மேற்கொண்டு வருகிறது, குறித்த நடவடிக்கைகள் மூலம் ஏராளமான போதைப்பொருள் கடத்தல் முயற்சிகளை முறியடிக்க முடிந்தது. அதன்படி, வட மத்திய கடற்படை கட்டளைக்கு சொந்தமான கடற்படை வீரர்கள் தலைமன்னார் கலங்கரை விளக்கத்தின் வடக்கு கடல் பகுதியில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதுடன் அங்கு ஒரு சந்தேகத்திற்கிடமான படகொன்று நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, 55 கிராம் கேரள கஞ்சா வைத்திருந்த இரண்டு நபர்களைக் கண்டுபிடித்துடன் பின்னர் அவர்கள் கடற்படை காவலில் வைக்கப்பட்டனர்.
இவ்வாரு கைது செய்யப்பட்ட நபர்கள் மன்னார் மற்றும் பேசாலை பகுதிகளில் வசிக்கும் 29 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டனர்,கெது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கேரள கஞ்சா மற்றும் படகு முலங்காவில் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.