மீன்பிடிக்கப் பயன்படுத்தப்படும் ஏராளமான வெடிபொருட்கள் கடற்படையால் கைது
கடற்படை மற்றும் பொலிஸ் சிறப்பு பணிக்குழு ஒருங்கிணைந்து 2020 மார்ச் 19 ஆம் திகதி சேருவில, உப்புரல் பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்களுடன் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
வெடிபொருட்கள் பயன்படுத்தி மீன்பிடித்தல் மூலம் கடல் சுற்றுச்சூழல் கடுமையாக சேதமடைகிறது, மேலும் அதைத் தடுக்க கடற்படை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதன்படி, கிழக்கு கடற்படை கட்டளைக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள், கந்தலை பொலிஸ் சிறப்பு பணிக்குழுவுடன் இனைந்து, சேருவில உப்புரல் பகுதியில் 2020 மார்ச் 19 அன்று தேடுதல் நடவடிக்கையை நடத்திய போது சாலையில் பயணித்த சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிளொன்று ஆய்வு செய்தார்கள் அங்கு மோட்டார் சைக்களில் பயணித்த நபரிடமிருந்தது அடையாளம் தெரியாத 01 கிலோகிராமுக்கு அதிகமான வெடிபொருட்கள், இரண்டு (02) வாட்டர் ஜெல் குச்சிகள், இரண்டு சேவை நூல்கள், இரண்டு மின்சாரம் அல்லாத டெட்டனேட்டர்கள் (02) மற்றும் ஒரு சார்ஜர் (01) ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன. பின்னர் அந்த நபரும் வெடிபொருட்களும் கைது செய்யப்பட்டன.
இவ்வாரு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 42 வயதான முத்தூர், வள்ளிகேனி பகுதியில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் குறித்த சந்தேகநபர் மோட்டார் சைக்கிள் மற்றும் வெடிபொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காக செருநுவர பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன