அனுமதிக்கப்பட்ட பத்திரங்கள் இன்றி மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று பேர் கடற்படையால் கைது
2020 மார்ச் 18 அன்று மன்னார் தெற்கு கடல்களில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டதற்காக மூன்று (03) நபர்களை கடற்படை கைது செய்தது.
கடல் வளங்களை பாதுகாக்க இலங்கை கடற்படை இலங்கை கடலில் தொடர்ந்து ரோந்து பணிகளை நடத்துகிறது. மன்னார் தெற்கே உள்ள கடலில் கடற்படைக் கப்பலான “ரத்னதீபா” நடத்திய ரோந்துப் நடவடிக்கையின் போது, மீன்பிடியில் ஈடுபட்டிருந்த சில டிங்கிகளைத் தேடியதுடன், செல்லுபடியாகாத அனுமதிக்கப்பட்ட பத்திரங்கள் இல்லாமல் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த ஒரு டிங்கியைக் கண்டுபிடித்தனர். அதன்படி, டிங்கியுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் 19 முதல் 26 வயதுடைய மன்னார் தல்பாட்டில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் பறிமுதல் செய்யப்பட்ட டிங்கி மற்றும் மீன்பிடி உபகரயங்களுடன் மீன்வள ஆய்வாள கார்யாலயத்திற்க்கு ஒப்படைக்கப்பட்டனர்.