ஹெராயினுடன் நபரொருவர் கடற்படையால் கைது
பேசாலை பகுதியில் இலங்கை கடற்படை மற்றும் மன்னார் பொலிஸ் போதைப்பொருள் பணியகம் நடத்திய கூட்டு நடவடிக்கையின் போது, ஹெராயின் கொண்ட ஒருவர் 2020 மார்ச் 18 அன்று கைது செய்யப்பட்டார்.
மற்றொரு போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை வட மத்திய கடற்படையில் இணைக்கப்பட்ட கடற்படை வீரர்களால் மன்னார் பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் அதிகாரிகளுடன் மேற்கொள்ளப்பட்டது, சந்தேகத்திற்கிடமான நபரைக் கண்டறிந்து, அவரிடம் 420 மி.கி ஹெராயின் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சந்தேக நபர் ஹெராயினை விற்பனைக்கு கொண்டு செல்லும்போது இவ்வாறு கைது செய்யப்பட்டார்.
குற்றம் சாட்டப்பட்டவர் 45 வயதான அதே பகுதியில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இதற்கிடையில், ஹெராயின் உடன் சந்தேகநபர் மேலதிக விசாரணைக்காக பேசாலை பொலீசில் ஒப்படைக்கப்பட்டார்.