கடற்படையினரால் அங்கீகரிக்கப்படாத வலைகள் மீட்ப்பு
இன்று மார்ச் 18 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட ஒரு தேடல் நடவடிக்கையின் போது, கடற்படை வீரர்கள் மட்களப்பு குளம் பகுதியில் அங்கீகரிக்கப்படாத வலைகளை கைப்பற்றியுள்ளனர்.
கடல் சூழல் அமைப்பைப் பாதுகாப்பதற்காக நாட்டின் பிராந்திய நீரில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுப்பதற்கான இலங்கை கடற்படையின் முயற்சிகளைக் கருத்தில் கொண்டு, கிழக்கு கடற்படைத் தளத்துடன் இணைக்கப்பட்ட கடற்படைப் வீரர்கள் 2020 மார்ச் 18 அன்று மட்டக்களப்பு பகுதியில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். அதன்படி, மீன்பிடிக்காக போடப்பட்ட இந்த அங்கீகரிக்கப்படாத வலைகள் மீட்கப்பட்டு அவை கடற்படை காவலில் எடுக்கப்பட்டன.
இதனையடுத்து, இந்த அங்கீகரிக்கப்படாத வலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மட்டக்களப்பில் உள்ள மீன்வள உதவி இயக்குநரிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.