சட்டவிரோத மதுபான உற்பத்தி செய்த இடம் கடற்படையினரால் சுற்றிவழைப்பு
மார்ச் 16 அன்று, இலங்கை கடற்படை புல்முடையில் ஜின்னபுரம் பகுதியில் ஒரு சட்டவிரோத மதுபானம் மற்றும் அதற்க்கு உபயோகப்படுத்தும் உபகரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
அதன்படி, கிழக்கு கடற்படை கட்டளைக்கு இணைக்கப்பட்ட கடற்படையினர் \புல்முடையில் ஜின்னபுரம் பகுதியில் மேற்க்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது காட்டு பகுதியில் சந்தேகத்திற்கிடமான புகையை கண்டறியப்பட்டது. மேலதிக விசாரணையில், மதுபானம் தயாரித்த இடம் சட்டவிரோதமாக உற்பத்தி செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. 20 லீட்டர் பிளாஸ்டிக் கேன், மூன்று வெற்று பிளாஸ்டிக் கேன்கள், ஒரு பிளாஸ்டிக் பீப்பாய் (01) மற்றும் பல உபகரணங்களையும் கடற்பட கைப்பற்றியது.
அப்பகுதியில் கடற்படை விசாரணையின் விளைவாக இந்த பொருட்கள் சந்தேக நபர்களால் விடப்பட்டதாக நம்பப்படுகிறது. கைப்பற்றப்பட்ட பொருட்கள் புல்முடை பொலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன.