‘இனோடெக் 2020’ கண்காட்சியில் கடற்படையின் பங்களிப்பு
‘இனோடெக் 2020’ தேசிய தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு கண்காட்சி ஹோமகமவின் பிட்டிபனாவில் 2020 மார்ச் 11 ஆம் திகதி தொடங்கியது.
INNOTECH 2020 தேசிய தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு கண்காட்சியை கல்வி, உயர் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு அமைச்சகம் அரசு ஆராய்ச்சி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் துறையுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது. இதற்கிடையில், கடற்படை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவின் புதுமைகளைப் பார்க்கக்கூடிய பொதுமக்களுக்கு கடற்படையின் கூடம் திறக்கப்பட்டிருந்த்து. தவிர, கடற்படையின் கூடத்திற்க்கு செல்வதன் மூலம் கடற்படை தலசீமியா திட்டம்,நீர் ஆலைத் திட்டம் மற்றும் அத்தகைய திட்டங்களில் பயன்படுத்தப்படும் சாதனங்கள் குறித்து பொதுமக்கள் தெரிந்துகொள்ளக்கூடிதாக இருந்த்து.
சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் அறிவியல் கல்வியறிவை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த கண்காட்சி 2020 மார்ச் 14 வரை நடைபெறும்.
|