கடற்படையினரால் 105 கடலட்டைகளுடன் 03 சந்தேக நபர்கள் கைது
இன்று (மார்ச் 12) மன்னாரில் உள்ள கொந்தாபிட்டியில் 105 கடலட்டைகளை சட்டவிரோதமாக பிடித்த 03 சந்தேக நபர்களை கடற்படை கைது செய்தது.
இலங்கை பிராந்திய நீரில் கடல் வளங்களை பாதுகாக்க கடற்படை வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.அதன்படி வட மத்திய கடற்படை கட்டளைக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள், மன்னாரில் உள்ள கொந்தாபிட்டியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது கடலட்டைகளுடன் 03 சந்தேக நபர்களையும் கைது செய்தனர். சந்தேக நபர்களுடன் சட்டவிரோதமாக அறுவடை செய்யப்பட்ட 105 கடல் அட்டைகள், ஒரு டிங்கி, மற்றும் ஒரு சில டைவிங் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் ஆகியவை கடற்படையால் காவலில் எடுக்கப்ட்டன.
கைது செய்யப்பட்ட நபர்கள் 35 முதல் 45 வயது வரையிலான தலைமன்னார் மற்றும் இருக்கலம்பிடி பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் கடல் அட்டைகள், டிங்கி மற்றும் பிற டைவிங் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் ஆகியவற்றுடன் மீன்வள உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.