சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கடற்படை சேவா வனிதா பிரிவு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியது

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி அருந்ததி உதிதமாலா ஜெயநெத்தியின் ஆதரவின் கீழ், பல்வேறு நிகழ்ச்சிகளை 2020 மார்ச் 10 ஆம் திகதி கலங்கரை விளக்கம் உணவகத்தில் ஏற்பாடு செய்யப்ட்டது.

இந்த நிகழ்வின் போது மடிக்கணினிகள், சக்கர நாற்காலிகள், செவிப்புலன் கருவிகள் மற்றும் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் கடற்படை வீரர்கள், அவர்களின் குழந்தைகள் மற்றும் சிறப்புத் தேவை உள்ள உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டன. இது தவிர, சேவா வனிதா பிரிவு சலுகை வட்டி விகிதத்தின் கீழ் 06 பெண் மாலுமிகளுக்கு தலா 150,000 ரூபாய் கடன் வழங்கப்பட்டன.

மேலும் இங்கு, சேவா வனிதா பிரிவின் மூத்த மற்றும் இளைய உறுப்பினர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட காகித வடிவமைப்பு, கேக் வடிவமைப்பு, தையல் வேலை மற்றும் அழகு கலாச்சாரம் ஆகிய பல நிகழ்சிகள் மூத்த மற்றும் அனுபவமிக்க கலைஞர்களின் பங்கேற்புடன் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சிகளை முடித்தவுடன், நிகழ்ச்சிகளை நடத்திய கலைஞர்களுக்கு அவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக சேவா வனிதா பிரிவு தலைவி, அதன் துணைத் தலைவி மற்றும் மூத்த உறுப்பினர்களினால் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.

சேவா வனிதா பிரிவு தலைவியின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்காக அதன் துணைத் தலைவி, மூத்த மற்றும் இளைய உறுப்பினர்கள் மற்றும் கடற்படை சேவா வனிதா பிரிவின் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.