இரண்டு சட்டவிரோத கஞ்சா விவசாயிகள் கடற்படை உதவியால் கைது
கடற்படை மற்றும் ஹம்பன்தோட்டை போலீஸ் ஊழல் தடுப்பு பிரிவு இனைந்து 2020 மார்ச் 10, ஆம் திகதி, மத்தல பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது ரகசியமாக கஞ்சா பயிரிட்ட இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
நாட்டில் இருந்து போதைப்பொருள் அச்சுறுத்தலை அகற்ற இலங்கை கடற்படை தீவிரமாக ஈடுபட்டுள்ளதுடன், தற்போது நடைபெற்று வரும் தேடுதல் நடவடிக்கையின் மற்றொரு கட்டமாக தெற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் ஹம்பாந்தோட்டை பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவின் ஒத்துழைப்புடன் மத்தலை பகுதியில் ஒரு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அங்கு ரகசியமாக பயிரிடப்பட்ட இந்த கஞ்சா சேனை கண்டுபிடிக்கப்பட்டதுடன் சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர், மேலும் 200 உள்ளூர் கஞ்சா மரக்கன்றுகள் மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்று சந்தேக நபர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 29 மற்றும் 35 வயதுடைய அம்பலந்தோட்டை மற்றும் பரவகும்புக ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர்கள், உள்ளூர் கஞ்சா மரக்கன்றுகள் மற்றும் துப்பாக்கியை ஹம்பாந்தோட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.