ரஷ்ய கடற்படைக் கப்பல் ‘அட்மிரல் வினோகிராதோவ்’ (Admiral Vinogradov) தாயகம் திரும்பியது
இந்த மாதம் 07 ஆம் திகதி இலங்கைக்கு வந்த ரஷ்ய கடற்படைக் கப்பலான ‘அட்மிரல் வினோகிராதோவ்’ (Admiral Vinogradov) இன்று 2020 மார்ச் 10 ஆம் திகதி இலங்கையில் இருந்து புறப்பட்டது.
நான்கு நாள் நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்தடைந்த இந்த கப்பல் இலங்கையில் தங்கியிருந்த போது இலங்கை கடற்படை ஏற்பாடு செய்த பல நிகழ்வுகளில் பங்கேற்றது. அங்கு இரு நாடுகளின் அறிவையும் அனுபவத்தையும் பகிர்ந்து கொள்ள முடிந்ததுடன் இது தொடர்பாக ரஷ்ய கப்பலின் அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் இலங்கை கடற்படையினரை பாராட்டினார்கள். தீவை விட்டு வெளியேறுவதற்கு முன்பு, கப்பலின் அதிகாரிகள் குழு மேற்கு கடற்படைக் கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்கவை சந்தித்து ஒரு நல்ல உரையாடலை நடத்தினார்கள் மற்றும் இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் நினைவு பரிசுகளும் பரிமாறிக்கொண்டது.
அதன் படி, வெற்றிகரமான விஜயத்தைத் தொடர்ந்து, நாட்டை விட்டு வெளியேறிய ரஷ்ய கப்பலுக்கு கடற்படை மரபுக்களுக்கமைய இலங்கை கடற்படை விடைபெற்றது.
|