கேரள கஞ்சாவுடன் ஒரு நபர் கைது செய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் பொலிஸார் இனைந்து 2020 மார்ச் 09, ஆம் திகதி கெபதிகொல்லாவ, கஹடகொல்லாவ பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 500 கிராம் கேரள கஞ்சா கொண்ட ஒரு வர் கைது செய்யப்பட்டார்.

நாட்டில் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கவும், போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்யவும் இலங்கை கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி 2020 மார்ச் 09 ஆம் திகதி வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர் கெபதிகொல்லாவ பொலிஸ் சிறப்பு பணிக்குழுவுடன் இனைந்து கெபதிகொல்லாவ, கஹடகொல்லாவ பகுதியில் மெற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது சாலையில் பயணித்த சந்தேகத்திற்கிடமான ஒருவர் சோதனை செய்யப்பட்டார். அங்கு அவரிடமிருந்து 500 கிராம் கேரள கஞ்சா கண்டு பிடிக்கப்பட்டதுடன் குறித்த நபரை கடற்படையால் கைது செய்யப்பட்டது.

அதன்படி, 24 வயதான சந்தேக நபர் கதுருவெவ, போகஸ்வெவ பகுதியில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் கேரள கஞ்சா மேலதிக விசாரணைகளுக்காக கெபதிகொல்லாவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.