அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மணல் ஏற்றிய நபர்கள் கடற்படையால் கைது
அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மணல் ஏற்றிக்கொண்டிருந்த பல நபர்கள் 2020 மார்ச் 22 ஆம் திகதி கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.
நாட்டில் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக இலங்கை கடற்படை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது, மேலும் திருகோணமலை செம்பல்தெட்டி பகுதியில் கிழக்கு கடற்படை கட்டளைக்கு இணைக்கப்பட்ட கடற்படையினர் மற்றொரு சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர். அங்கு 20 சந்தேக நபர்கள் அனுமதி இல்லாமல் மணல் ஏற்றும்போது கடற்படையால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து டிரெய்லருடன் 04 டிராக்டர்கள் மற்றும் 03 கியுப் மணல் கைது செய்ய்பட்டது.
இவ்வாரு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் திருகோணமலை மற்றும் கின்னியா பகுதியில் வசிக்கின்ற 20 முதல் 49 வயதுக்கு உட்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள், டிரெய்லருடன் டிராக்டர்கள் மற்றும் மணல் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கின்னியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.