ரோயல் அவுஸ்திரேலிய கடற்படைக் கப்பல் எச்.எம்.ஏ.எஸ் பராமட்டா கொழும்பு துறைமுகத்தை வந்தடைகிறது
ராயல் அவுஸ்திரேலிய கடற்படை கப்பல் எச்.எம்.ஏ.எஸ் பராமட்டா இன்று (மார்ச் 07, 2020) கொழும்பு துறைமுகத்திற்கு வந்து, கடற்படை மரபுகளுக்கு இணங்க இலங்கை கடற்படையினால் வரவேற்க்கப்பட்டது.
அஸ்திரேலியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நெருக்கமான கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பைத் தொடர இங்கு வந்த எச்.எம்.ஏ.எஸ் பராமட்டாவின் சமீபத்திய துறைமுகமாக கொழும்பு துறைமுகம் அமைந்தது. எச்.எம்.ஏ.எஸ் பராமட்டாவின் கட்டளை அதிகாரி கமாண்டர் அனிதா மேரி நெமரிச் உள்ளிட்ட அவுஸ்திரேலிய தூதுக்குழு மேற்கு கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்கவை சந்தித்து இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில் நல்லுறவு கலந்துரையாடினார். இந்த சந்தர்ப்பத்தின் முக்கியத்துவத்தை குறிக்கும் வகையில் நினைவு பரிசுகளும் பரிமாறப்பட்டன.
இந்த கப்பல் இலங்கையில் மார்ச் 07 முதல் 11 வரை இருக்கும், மேலும் அவர்கள் தீவில் தங்கியிருக்கும் போது, இலங்கை கடற்படை ஏற்பாடு செய்துள்ள பரந்த அளவிலான நிகழ்ச்சிகள், நட்பு விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் சுற்றுப்பயணங்களில் பங்கேற்க உள்ளனர்.
|