கடற்படை மற்றும் பொலிஸ் ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கையின் போது நான்கு (04) சந்தேக நபர்கள் ஹெராயினுடன் கைது செய்யப்பட்டனர்

2020 மார்ச் 06 ஆம் திகதி திருகோணமலையில் உள்ள பொலிஸ் போதைப்பொருள் பணியகத்துடன் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கைகளின் போது, இரண்டு தனித்தனியான சந்தர்ப்பங்களில் ஹெராயினுடன் 04 நபர்கள் கடற்படையினரால் கைது செய்ப்பட்டுள்ளனர்.

நாட்டிலிருந்து போதைப்பொருள் அச்சுறுத்தலைத் தடுக்கும் நோக்கில், கடற்படை போதைப்பொருள் கடத்தல்காரர்களால் கடத்த முயற்சித்த போதைப்பொருட்களைத் தடுப்பதற்காக கடலிலும் நிலத்திலும் ஏராளமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி பொலிஸ் போதைப்பொருள் பணியகத்துடன் ஒருங்கிணைந்து கிழக்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் நடத்திய இதேபோன்ற தேடுதல் நடவடிக்கையின் போது, திருகோணமலையில் உள்ள கோட் பே மீன்வள துறைமுகத்திற்க்கு அருகே சந்தேகத்திற்கிடமான முச்சக்கர வண்டி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலதிக தேடலின் போது, முச்சக்கர வண்டியில் பயணித்த 02 நபர்களின் வசம் சுமார் 1720 மி.கி ஹெராயின் கண்டுபிடிக்கப்பட்டது.

இதற்கிடையில், திருகோணமலையில் சீனா விரிகுடாவில் தெருக்களில் அலைந்து திரிந்த 02 சந்தேக நபர்களை சோதனை செய்கையில் சுமார் 820mg ஹெராயின் அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டது. அதன்படி, 04 சந்தேக நபர்களிடமும் மொத்தமாக 2540 மி.கி ஹெராயின் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டு சம்பவங்கள் தொடர்பாக சந்தேக நபர்கள், முச்சக்கர வண்டி மற்றும் ஹெராயினும் கைது செய்ய நடவடுக்கை எடுக்கப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்டவர் 26 முதல் 60 வயதுடைய திருகோணமலை மற்றும் சீனா விரிகுடாவில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.சந்தேகநபர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் உப்புவேலி மற்றும் சீனா பே காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டன.