இரண்டு (02) ரஷ்ய கடற்படைக் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை
ரஷ்ய கடற்படையின் யரோஸ்லவு மட்ரி (Yaroslav Mudry) மற்றும் விக்டர் கோனெட்ஸ்கி (Victor Konetsky) ஆகிய கப்பல்கள் இன்று (2020 மார்ச் 04) கொழும்பு துறைமுகத்திற்கு வந்தது. இந்த கப்பல்கள் இலங்கை கடற்படையால் கடற்படை மரபுகளுக்கேற்ப வரவேற்க்கப்பட்டது.
அதன்படி, இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை அதிகரிக்கும் நோக்கில் இலங்கைக்கு வந்த இக் கப்பல்களின் கட்டளை அதிகாரிகளான கேப்டன் விக்ட வெசிலியேன்விச் கோஸ்ட்ரியுகோவ் ‘Victor Vasilyevich Kostriukov’ மற்றும் கேப்டன் மிகாயில் அலெக்ஸாண்ட்ரோவிச் ‘Mikchail Aleksandrovich’ உட்பட அதிகாரிகள் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சுமித் விரசிங்கவை சந்தித்து இருதரப்பு விஷயங்கள் குறித்து கலந்துரையாடினார்கள்.இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் நினைவு பரிசு பரிமாற்றமும் நடைபெற்றது.
இந்த கப்பல்கள் தீவில் தங்கியிருந்தபோது இலங்கை கடற்படை ஏற்பாடு செய்கின்ற கலாச்சார நிகழ்வுகளில் மற்றும் இலங்கையின் முக்கியமான இடங்களின் சுற்றுப்பயணங்கள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்க திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த படகுகள் மூன்று நால் விஜயத்தின் பிறகு, 2020 மார்ச் 6, அன்று தீவை விட்டு வெளியேறும்.
|