சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 02 நபர்கள் கடற்படையினரால் கைது

கடற்படை மன்னார் தெற்கு கடல் பகுதியில் மேற்கொண்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது இந்திய கடற்பகுதியில் இருந்து இலங்கை கடற்பகுதிக்கு வந்து கொண்டிருந்த இரண்டு மீனவர்களை கைது செய்யப்பட்டது.

இலங்கை கடற்படை இன்று (2020 மார்ச் 04) சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக மன்னார் தெற்கு கடல் பகுதியில் ரோந்துப் பணியை மேற்கொண்டது. அப்போது ஒரு சந்தேகத்திற்கிடமான டிங்கி படகொன்று இந்திய கடல் பகுதியில் இருந்து கடற்கரையை நெருங்கியது. குறித்த படகு சோதித்த போது கப்பலில் இருந்து ஏராளமான சதுப்புநிலக் கிளைகள் மீட்கப்பட்டன, மேலும் மீன்பிடிக் படகில் அடையாளத்தை அல்லது மீனவர்களின் அடையாளத்தை நிரூபிக்க எந்த ஆவணங்களும் இல்லை என்பது தெரியவந்தது.அதன் பின் இந்த படகை கடற்படையால் கைது செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட நபர்கள் மன்னார் பேசாலை பகுதியில் குடியிருப்பாளர்கள் என்பது மேலும் விசாரணையில் தெரியவந்துள்ளதுடன் குறித்த நபர்கள் மீன்பிடி படகு மற்றும் பிற மீன்பிடி உபகரணங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.