வருடாந்த கச்சத்தீவு திருவிழாவுக்கு கடற்படை தயார்
இலங்கை மற்றும் இந்திய கத்தோலிக்க பக்தர்கள் மிகுந்த மரியாதை மற்றும் பக்தியுடன் பூஜை வழிபாடுகள் செய்கின்ற இந்திய-இலங்கை கடல் எல்லையில் அமைந்துள்ள கச்சத்தீவு ஆலயத்தில் வருடாந்த திருவிழா மிக சிறப்பாக நடத்த கடற்படை தற்போது நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.
2020 மார்ச் 07 ஆம் திகதி நடைபெறவுள்ள இந்த திருவிழாவுக்கு இலங்கை மற்றும் இந்திய பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் உட்பட 10,000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் படி கச்சத்தீவு திருவிழாவின் கழந்து கொல்லும் பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், சுகாதார வசதிகள், தற்காலிக படகுத்துறைகள் மற்றும் மின்சார வசதிகள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் அறிவுறுத்தலின் கீழ் வடக்கு கடற்படை கட்டளையின் தளபதி மற்றும் துணைத் தலைமை பணியாளர் ரியர் அட்மிரல் கபில சமரவீரவின் மேற்பார்வையில் தற்போது மேற்கொள்ளப்படுகிறது.
அதன் படி கங்கசந்துரை மற்றும் புங்குடிதிவு, குரிகட்டுவான் படகுத்துறையில் இருந்து கச்சத்தீவு வரை குருக்கள், அரசாங்க அதிகாரிகள், சிறப்பு நபர்கள், பக்தர்கள், உள்நாட்டு வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மற்றும் பூஜைக்கு தேவையான பல பொருட்கள், உபகரணங்கள் ஆகியவற்றைக் கொண்டு செல்ல ஒரு சிறப்புத் திட்டமொன்றை கடற்படை தயார் செய்துள்ளதுடன் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக மருத்துவ வசதிகளை வழங்க மீட்பு குழுக்கள் மற்றும் மருத்துவ குழுக்களை அனுப்ப கடற்படை தயாராகி வருகிறது.