நீல பசுமை திட்டத்தின் கீழ் தெற்கு மாகாணத்தை மையமாகக் கொண்ட பல திட்டங்கள்
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்படுகின்ற நீல பசுமைத் திட்டத்தின் பல நிகழ்வுகள் 2020 பிப்ரவரி 29 ஆம் திகதி தெற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் கச்சப்ப போலின் மேற்பார்வையில் தெற்கு மாகாணத்தில் செயல்படுத்தப்பட்டது.
தினசரி ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்ற இலங்கையின் மிகவும் பிரத்யேகமான ராம்சார் ஈரநிலங்களில் ஒன்றான மாதுகங்க மற்றும் களப்பு பகுதி மையமாகக் கொண்டு ஒரு நிகழ்ச்சி நடத்தியதுடன் அங்கு மாதுகங்க இருபுறம் மற்றும் களப்பு பகுதியில் இருந்த பாலிதீன், பிளாஸ்டிக் மற்றும் பிற கழிவுகள் அகற்றப்பட்டன. இந்த தனித்துவமான சுற்றுச்சூழல் அமைப்பில் பல தனித்துவமான தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
மேலும் இந்த திட்டத்துக்கு இனையாக தங்காலை பரவி வெல்ல கடற்கரை மற்றும் ஹம்பாந்தோட்டை குழந்தைகள் பூங்காவில் உள்ள கடற்கரையை சுத்தம் செய்வதற்கான ஒரு திட்டமும் மேற்கொள்ளப்பட்டதுடன் இந்த பகுதிகளை கடற்படையினரின் அர்ப்பணிப்புடன் கழிவு இல்லாத மண்டலங்களாக மாற்ற முடிந்தது
|