மன்னார் மருத்துவமனையைச் சுற்றியுள்ள பகுதி தூய்மைப்படுத்த கடற்படை பங்களிப்பு
மன்னார் மருத்துவமனை சந்தியில் இருந்து எலுவதூர் சந்தி வரை செல்லும் சாலையின் இப்பகுதியை சுத்தம் செய்ய இலங்கை கடற்படை 2020 பிப்ரவரி 29, அன்று பங்கழிப்பு வழங்கியது.
அதன்படி, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் நீல பசுமை சுற்றுச்சூழல் கருத்துக்கு இணங்க, மன்னார் மருத்துவமனை சந்தியில் இருந்து எலுவதூர் சந்தி வரை சுற்றுச்சூழலை சுத்திகரிக்கும் திட்டமொன்று வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் நடத்தப்பட்டது. மன்னார் மாநகர சபையுடன் இனைந்து மேற்கொள்ளப்பட்ட இந்த நிகழ்வில் 45 கடற்படையினர் மற்றும் 20 மன்னார் மாநகர சபை ஊழியர்கள் பங்கேற்றனர்.
மேலும், இந்த சமூக சேவைக்காக பங்களித்த இலங்கை கடற்படைக்கு மாதோட்ட விஹாரையின் தலைமை தேரர் மற்றும் புனித செபஸ்டியன் தேவாலயத்தின் பாதிரியாரின் பாராட்டு வழங்கப்பட்டன.