சுமார் 140 கிலோ மற்றும் 300 கிராம் போதைப்பொருள் கடற்படை உதவியால் கைது
இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகம் இனைந்து காலி கடல் பகுதியில் சுமார் 140 கிலோ மற்றும் 300 கிராம் போதைப்பொருளுடன் 6 சந்தேக நபர்களை இன்று (2020 பிப்ரவரி 29) கைது செய்துள்ளனர்.
பொலிஸ் போதைப்பொருள் பணியகத்துடன் இனைந்து கடற்படை நடத்திய கூட்டு நடவடிக்கையில் ஹெராயின் என்று சந்தேகப்படுகின்ற சுமார் 74 கிலோ மற்றும் 600 கிராம் போதைப்பொருட்களும் ஐஸ் என்று சந்தேகப்படுகின்ற சுமார் 65 கிலோ மற்றும் 700 கிராம் போதைப்பொருட்களும் கொண்ட ஆறு சந்தேக நபர்களுடன் இரண்டு டிங்கி படகுகள் கைது செய்யப்பட்டது. கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு சுமார் 1750 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர்கள் திக்வெல்ல, பெலியத்த, பிலியன்தல, தங்காலை மற்றும் குடா வெல்ல பகுதிகளில் வசிக்கின்ற 33 முதல் 53 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது மேலும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் பணியகம் சந்தேக நபர்கள் மற்றும் டிங்கி கப்பல்கள் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.
|