12 கிலோகிராம் கேரள கஞ்சா கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டது
மன்னார், வன்காலே கடற்கரையில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையில் இலங்கை கடற்படை இன்று (2020 பிப்ரவரி 28) 12 கிலோகிராம் கேரள கஞ்சாவை பறிமுதல் செய்தது.
இலங்கை கடற்படை எப்போதுமே போதைப்பொருளை ஒழிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மன்னார் வன்காலே கடற்கரையில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது கடற்கரைக்கு அருகே தரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 12 கிலோ மற்றும் 450 கிராம் (6 பார்சல்கள்) கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது.
போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்ய கடற்படை தொடர்ந்து மேற்கொள்கின்ற கண்காணிப்பு நடவடிக்கைகளின் விளைவாக குறித்த கேரள கஞ்சா பொதிகள் கடத்தல்காரர்களால் மறைக்கப்பட்டதாக சந்தேகப்படுகிறது. கைது செய்யப்பட்ட கேரள கஞ்சா மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் ஊழல் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
|