கேரள கஞ்சாவுடன் ஒரு நபர் கைது செய்ய கடற்படை ஆதரவு
கடற்படை மற்றும் பொலிஸ் சிறப்பு பணிக்குழுவின் குற்றத் தடுப்பு பிரிவு இனைந்து 2020 பிப்ரவரி 27, ஆம் திகதி நீர்கொழும்பு, தேவத்த பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 100 கிராம் கேரள கஞ்சா கொண்ட ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
நாட்டில் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கவும், தீவில் போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்யவும் இலங்கை கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி 2020 பிப்ரவரி 27 ஆம் திகதி பொலிஸ் சிறப்பு பணிக்குழுவின் குற்றத் தடுப்பு பிரிவுடன் இனைந்து நீர்கொழும்பு, தேவத்த பகுதியில் மெற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது ஒரு சந்தேக நபர் பரிசோதிக்கபட்டதுடன் அவரிடமிருந்து 100 கிராம் கேரள கஞ்சா (37 பாக்கெட்டுகள்) கண்டுபிடிக்கப்பட்டது. குறித்த கேரள கஞ்சா விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது இவ்வாரு கைது செய்யப்பட்டதுடன் சந்தேகநபர் றாகம பகுதியில் வசிக்கும் 49 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவ்வாரு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மற்றும் கேரள கஞ்சா மேலதிக விசாரணைகளுக்காக றாகம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.