Table Top பயிற்சி 2020 திருகோணமலையில் நடைபெற்றது
ஒத்துழைப்பு மூலம் தீங்கு விளைவிக்கும் கருப்பொருளின் கீழ் நான்காவது துரித தாக்குதல் ரோந்து படகுகள் குழுவினால் ஏற்பாடு செய்த வருடாந்திர Table Top பயிற்சி, திருகோணமலை கடற்படைத் தளத்தில் இம்மாதம் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் இடம்பெற்றதுடன் கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் ருவன் பெரேரா பிரதம அதிதயாக கலந்து கொண்டார்.
பல்வேறு அவசரநிலைகளில் எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்பதை அறிய பங்குதாரர்களுக்கு வாய்ப்புகளை வழங்கல், திறன்களை ஒருங்கிணைத்தல், பொருத்தமான தீர்வுகளுடன் சிக்கல் அடையாளம் காணல் மற்றும் இளம் அதிகாரிகளின் அறிவை மேம்படுத்துதல். இந்நிகழ்ச்சியில் நோக்கமானது. இலங்கை கடற்படை, கடலோர காவல்படை, பொலிஸ் போதைப்பொருள் பணியகம் மற்றும் மீன்வள மற்றும் நீர்வளத் துறை பிரதிநிதிகள் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இரண்டு நாளாக இடம்பெற்ற இந்த பயிற்சியின் மீன்பிடித் தொழிலின் நீடித்த தன்மைக்கு தாக்கத்தை ஏற்படுத்துகின்ற சட்டவிரோத மீன்பிடித்தல், போதைப்பொருளை ஒழித்தல் மற்றும் ஐ.நா கடல் சட்டம் தொடர்பான மாநாடு போன்றவற்றையும் ஆய்வு செய்யப்பட்டது,
மேலும், இந்த பயிற்சியில் பங்கேற்ற இலங்கை கடலோர காவல்படை, பொலிஸ் போதைப்பொருள் பணியகம் மற்றும் மீன்வள மற்றும் நீர்வளத் துறை வல்லுநர்கள் தொடர் சொற்பொழிவுகளை நடத்தினர், இதனால் பங்கேற்பாளர்களின் அறிவை மேம்படுத்தப்பட்டது.
இரண்டாவது நாளில், மேற்கூறிய பேரழிவுகளுக்கு எவ்வாறு பதிலளிப்பது மற்றும் தீர்வுகளை எவ்வாறு வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டுவருவது என்பது பற்றி ஒரு நீண்ட விவாதம் நடைபெற்றதுடன் இந்த பயிற்சி திட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது