கேரள கஞ்சாவுடன் ஒரு நபர் கைது செய்ய கடற்படை ஆதரவு
கடற்படை மற்றும் சங்கானே கலால் பிரிவு இனைந்து 2020 பிப்ரவரி 25 ஆம் திகதி பருத்தித்துறை தம்பாலை பகுதியில் மெற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 21 கிலோ மற்றும் 510 கிராம் கேரள கஞ்சாவை கண்டுபிடிக்கப்பட்டது.
நாட்டில் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கவும், தீவில் போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்யவும் இலங்கை கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி 2020 பிப்ரவரி 25 ஆம் திகதி சங்கனே கலால் பிரிவுடன் இனைந்து பருத்தித்துறை தம்பாலை பகுதியில் மெற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது காட்டில் மறைக்கப்பட்டுருந்த 21 கிலோ மற்றும் 510 கிராம் கேரள கஞ்சாவை கடற்படையால் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், இங்கு ஒரு சந்தேகத்திற்கிடமான நபர் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளும் கடற்படையால் கைது செய்யப்பட்டன.
இவ்வாரு கடற்படையால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் அன்தோனிபுரம், பலாலி பகுதியில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர் மற்றும் மோட்டார் சைக்கிள் குறித்து சங்கானே கலால் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
|