மறுசுழற்சி நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் அறிவுறுத்தலின் பேரில் பானம ஸ்ரீ போதிருக்காராம மகா விஹாரயவில் நிர்மாணிக்க திட்டம் பட்டுள்ள மறுசுழற்சி நீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கான அடிக்கல் 2020 பிப்ரவரி 24 ஆம் திகதி தென்கிழக்கு கடற்படைக் கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் சேனரத் விஜேசூரியவினால் நாட்டப்பட்டது.
அதன்படி, அப்பகுதி மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்ய அரசாங்க நிதியுதவியுடன் கடற்படையால் நிர்மாணிக்க திட்டம் பட்டுள்ள இந்த மறுசுழற்சி நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்காக அடிக்கல் நாட்டப்பட்டதுடன் இந் நிகழ்வுக்காக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மேலும், இலங்கையிலிருந்து கொடிய சிறுநீரக நோயை ஒழிப்பதற்கான தேசிய முயற்சியின் ஒரு பகுதியாக கடற்படை உள்ளதுடன் அதிகமான நீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவவும், மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யவும் கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.
|