இந்தியப் பெருங்கடல் பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பின் பிரதிநிதிகளுக்காக இலங்கை கடற்படை நடத்திய பாடத்திட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது
இந்தியப் பெருங்கடல் பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பின் பிரதிநிதிகளுக்காக இலங்கை கடற்படை நடத்திய பாடத்திட்டம் 2020 பிப்ரவரி 21 ஆம் திகதி வெற்றிகரமாக நிறைவடைந்தது.
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் வழிகாட்டுதலில் கிழ் மேற்கொள்யப்பட்ட இந்த பயிற்சி கடந்த 10 ஆம் திகதி தொடங்கியதுடன் இந்த பாடத்திட்டத்தில் பங்களாதேஷ் கடலோர காவல்படையின் ஒரு உறுப்பினர், கடற்படை கொடி கட்டளையின் 08 கடற்படையினர் மற்றும் சிறப்பு படகுப் படையின் 7 கடற்படை வீரர்கள் பங்கேற்கின்றனர். அதன்படி, பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாலுமிகளுக்கான சான்றிதழ் வழங்கும் விழா, 2020 பிப்ரவரி 21, அன்று திருகோணமலை சிறப்பு படகுப் படை பயிற்சி பாடசாலையில் இடம்பெற்றதுடன் இந் நிகழ்வில் பிரதம அதிதியாக சிறப்பு படகுப் படையின் பயிற்சி அதிகாரி கொமான்டர் நிஷ்சன்க விக்ரமசிங்க கலந்து கொண்டார்.
திருகோணமலை சிறப்பு படகுப் படைத் தலைமையகத்தில் இந்த பாடநெறி 12 நாட்களாக இடம்பெற்றதுடன் இந்த பாடநெறியில் முக்கியமாக போதைப்பொருள் கண்டறிதல், போதைப்பொருள் கடத்தல், தயாரிப்பு மற்றும் போக்குவரத்து ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டது.