கடலோரப் பகுதிகள் பாதுகாக்க கடற்படை பங்களிப்பு

கடற்படை மேற்கொள்ளும் கடற்கரைகள் தூய்மைப்படுத்தும் திட்டத்தொடரில் மேலும் பல நிகழ்வுகள் கிழக்கு, தெற்கு, வட மத்திய மற்றும் தென் கிழக்கு கடற்படை கட்டளைகளில் 2020 பிப்ரவரி 10,15 மற்றும் 16 ஆகிய திகதிகளில் இடம்பெற்றது.

அதன்படி, கிழக்கு கடற்படை கட்டளை மூலம் திருகோணமலை கடற்படை முகாம் பகுதியில் சாண்டிபே கரையோர தூய்மைப்படுத்தும் திட்டத்தை செயல்படுத்தியது. அதே போன்ற தென் கடலோரத்தை சுத்தம் செய்வதற்கான ஒரு திட்டத்திற்கும் கடற்படை பங்களிப்பு செய்துள்ளது, தெற்கு கடற்படை கட்டளை மூலம் காலி, தங்காலை பரவிவெல்ல கடற்கரை, பூச்ச இருந்து ரஜ்கம வரை மற்றும் இந்திவின்ன கரையோரப் பகுதியை சுத்தம் செய்யப்பட்டது.மேலும், வடமத்திய கடற்படை கட்டளை மூலம் தலைமன்னார் பியர்கம கடலோரப் பகுதியும் தென்கிழக்கு கடற்படை கட்டளை மூலம் பொத்துல் உல்ல கடற்கரையையும் சுத்தம் செய்யப்பட்டது.பாடசாலை குழந்தைகள் மற்றும் பொதுமக்களின் உதவியுடன், கடற்கரைகளை சுத்தம் செய்ய பங்களித்த அனைவரின் அர்ப்பணிப்பால் இந்த கடற்கரைகளை சுத்தம் செய்வது சாத்தியமானது.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் கட்டளைகளைத் தொடர்ந்து, அனைத்து கடற்படை கட்டளைகளிலும் சுற்றியுள்ள கடற்கரை பகுதிகளை சுத்தம் செய்வதற்கும், தீவைச் சுற்றியுள்ள மாசுபட்ட கரையோரப் பகுதியை அழகாக மாற்றுவதற்கும் கடற்படை பாராட்டத்தக்க ஒரு வேலையைச் செய்து வருகின்றது. இது தீவு முழுவதிலுமிருந்து உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றது.


கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்கரை தூய்மைப்படுத்தும் திட்டம்


தெற்கு கடற்படை கட்டளையின் கடற்கரை தூய்மைப்படுத்தும் திட்டம்


வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்கரை தூய்மைப்படுத்தும் திட்டம்


தென் கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்கரை தூய்மைப்படுத்தும் திட்டம்