14 கிலோ கிராமுக்கு மேற்பட்ட தங்கத்துடன் இரண்டு சந்தேக நபர்கள் கடற்படையால் கைது
2020 பிப்ரவரி 14 ஆம் திகதி மாதகல் கடல் பகுதியில் மேற்கொண்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது கடல் வழியாக கடத்தப்பட்ட தங்கத்துடன் இரண்டு நபர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டது.
கடற்படைக்கு கிடைத்த தகவலின்படி, மாதகல் கடல் பகுதியில் மேற்கொண்டுள்ள சிறப்பு நடவடிக்கையின் போது இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக தங்கத்தை கொண்டு சென்ற இருவரை இவ்வாரு கடற்படை கைது செய்துள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் அளவு 14 கிலோ மற்றும் 350 கிராமாகும். இதன் மதிப்பு சுமார் 110 லட்ச்சம் ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் 27 வயதான இப் பகுதியில் வசிக்கின்றவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடற்படையால் கைது செய்யப்பட்ட 14 கிலோ 350 கிராம் தங்கம், இரண்டு சந்தேக நபர்கள் மற்றும் டிங்கி படகு மேலதிக விசாரணைகளுக்காக காங்கேசன்துறை சுங்க அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன
இந்த நடவடிக்கையை வடக்கு கடற்படை கட்டளை நடத்தியது
|