அனுமதி பத்திரங்கள் இல்லாமல் சுழியோடி உபகரணங்களைப் பயன்படுத்திய இருவர் கடற்படையால் கைது
மன்னார் பல்லேமுனை கடற்கரையில் ரோந்து செல்லும் போது அனுமதி பத்திரங்கள் இல்லாமல் சுழியோடி உபகரணங்களை பயன்படுத்திய இரண்டு நபர்கள் 2020 பிப்ரவரி 11 அன்று கடற்படையால் கைது செய்யப்பட்டனர்
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளால் ஏற்படும் கடல் வளங்களை அழிப்பதைத் தடுக்கும் நோக்கத்துடன் இலங்கை கடற்படை தீவைச் சுற்றி ரோந்துப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் படி 2020 பிப்ரவரி 11 ஆம் திகதி மன்னார் பல்லேமுனை கடற்கரையில் ரோந்து செல்லும் போது அனுமதி பத்திரங்கள் இல்லாமல் சுழியோடி உபகரணங்களை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் கடற்படையால் கைது செய்யப்பட்டனர். அங்கு குறித்த நபர்கள் மற்றும் சுழியோடி உபகரணங்கள் உட்பட மீன்பிடி கருவிகள் கடற்படை காவலில் வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாரு கைது செய்யப்பட்ட நபர்கள், 27 மற்றும் 29 வயதுடைய மன்னார் மற்றும் சிலாவத்துர பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் மற்றும் சுழியோடி உபகரணங்கள் உட்பட மீன்பிடி கருவிகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் உதவி மீன்வள இயக்குநரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.