சட்ட விரோதமாக கடல் அட்டைளை பிடித்த 12 நபர்கள் கடற்படையினரால் கைது
2020 பெப்ரவரி 07 ஆம் திகதி மன்னார் வாலைப்பாடு, கடலில் சட்டவிரோதமாக கடல் அட்டைகளை பிடித்த 12 நபர்களை கடற்படை கைது செய்தது.
கடற்படை, பிராந்திய நீரின் மீன்வள வளங்களை பாதுகாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் விரிவாக்கமாக,பெப்ரவரி 7 ஆம் திகதி கடற்படை வாலைப்பாடு பகுதியில் இதேபோன்ற நடவடிக்கையை நடத்திய போது சட்டவிரோதமாக கடல் அட்டைகளை பிடித்த 12 நபர்களை கடற்படை கைது செய்ய முடிந்தது. சந்தேக நபர்களுடன் சட்டவிரோதமாக பிடிபட்ட 17 கடல் ,அட்டைகள் 04 டிங்கிகள் மற்றும் பல டைவிங் உபகரணங்கள் ஆகியவை கடற்படை காவலில் வைக்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் மன்னார் பகுதியில் வசிக்கும், 24 முதல் 50 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட 12 சந்தேக நபர்கள் கிலினொச்சியின் மீன்வளத்துறை உதவி இயக்குநரிடம் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டனர்.